நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் துவக்க விழா!
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் துவக்க விழா!
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கல்லூரியின் செயல் தலைவருமான முனைவர் பி.எஸ்.எஸ். சீனிவாசன் தலைமை தாங்கி கல்லூரியின் சிறப்புகளையும், நடப்பு ஆண்டு 2025, 26 இல் நமது கல்லூரி மாநில அளவிலான பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியலில் 54 வது இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள மாற்றம் பவுண்டே'னின் நிறுவனர் சுஜித்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், கல்லூரி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் கே.விசாகவேல் பேசுகையில், தன்னாட்சி பாடத்திட்டம் மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் தொழில்நிறுவனங்களின் ஆதரவு கொண்டு பல துறைகளில் உயர் தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்கள் செயல்படுகிறது என்று கூறினார். மேலும் இவை மாணவர்களுக்கு தொழில்நுட்பத்திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்க பெரிதும் உதவுகின்றன என்று எடுத்துரைத்தார்.
முதல் வருட பி.இ/பி.டெக் படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், 7.5% இடஒதுக்கீட்டு திட்டம், மாற்றம் அறக்கட்டளை உதவித்தொகை மற்றும் அறக்கட்டளையின் மூலம் வழங்கப்படும் மாணவர் உதவித்தொகை ஆகிய பல்வேறு வகைகளில், நான்கு ஆண்டுகளுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள உதவித்தொகைகளை பெற உள்ளனர். கே.ஐ.ஒ.டி அறக்கட்டளை மாணவர் உதவித்தொகை என்பது கே.ஐ.ஒ.டி - இல் சேர்க்கை பெற்ற மற்றும் 190-க்கும் மேற்பட்ட கட்-ஆப் மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும்.
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் ஜெ.குமார் துணை தலைவர் ஆர்.முத்துசாமி, இணை செயலாளர் என்.சிவபிரசாத், பொருளாளர் வி.சுரேஷ்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் நாலெட்ஜ் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?



