நில அளவை துறையில் காலி பணியிடங்களை நிரப்பி பணிச்சுமையை குறைத்திட வேண்டும். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

Jul 15, 2025 - 11:58
 81
நில அளவை துறையில் காலி பணியிடங்களை நிரப்பி பணிச்சுமையை குறைத்திட வேண்டும். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நில அளவை துறையில் காலி பணியிடங்களை நிரப்பி பணிச்சுமையை குறைத்திட வேண்டும்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம். நில அளவைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் பணிச்சுமையை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு 48 மணி நேரம் வேலை நிறுத்த சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நில அளவைத் துறையில் பணியாற்றும் களப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும். தரமிறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியை மீள வழங்கிடவும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். புற ஆதார முறையில் உரிமம் பெற்ற நில அளவர் நியமனத்தினை முற்றிலும் கைவிடவும், உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். நீதிமன்ற பயிற்சி வழங்கிடுக. புதிய நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்கிடவும், எஸ்சிஆர்சி கமிட்டிக்கு ஓப்படைக்கப்பட்ட சார் ஆய்வாளர் பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் தலைவர் சுதாகர் தலைமையில் கண்டனார் பட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் முருகப்பெருமாள், மாவட்ட செயலாளர் செல்லமுத்து, பொருளாளர் இளங்கோ, இணை செயலாளர் தமிழரசன்,கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow