மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Jul 23, 2024 - 13:11
 19

திமுக அரசு பதவியேற்ற 3 ஆண்டுகளில் 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் போன்ற உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் நிறுத்த முயற்சிப்பதை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை திரு.வி.க.திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக பகுதி செயலாளர் தண்டபாணி, பாஸ்கர், மற்றும் முன்னாள் கோட்டத் தலைவர் ஏ.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், எஸ்.எம்.பாலன்  ,சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணியன், பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, சார்பு அணி நிர்வாகிகள்
ரீனா செந்தில், செல்வ மேரி ஜார்ஜ், எஸ்பி கணேசன், கே.எஸ்.பாஸ்கர் ,கார்த்திக் சுரேஷ்குமார், பொன்னுசாமி, அழகர்சாமி, முருகன்,
  வர்த்தக அணி சூரியூர் ராஜா, கலைப்பிரிவு ராஜா பாசறை வி.டி.எம்.அருண் நேரு, இளைஞர் அணி சண்முக பிரபாகரன்,
ஒன்றிய செயலாளர்கள் சேது ,சூப்பர் டிஎன்டி நடேசன், அசோகன், ராஜாராம், பழனிச்சாமி, அன்பரசன், சிவக்குமார் , பவுன் ராமமூர்த்தி, பொன்னி சந்திரசேகர் , ஜேக்கப், அருள்ராஜ், பிச்சை பிள்ளை, ஜெயசீலன் திருமலை சாமிநாதன், கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கர், தெய்வ மணிகண்டன்,
மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி.கார்த்திக், எஸ்.எஸ். ராவணன், நகரச் செயலாளர் எஸ் பி பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் சாந்தி கூத்தைப்பார், பேரூர் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow