ரோட்டரி கிளப் ஆப் சேலம் எலைட் மற்றும் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இணைந்து 9 ஜோடி மாற்றுத்திறன் படைத்த மணமக்களுக்கு திருமணம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தார்கள்.

Dec 11, 2025 - 16:48
 47
ரோட்டரி கிளப் ஆப் சேலம் எலைட் மற்றும் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இணைந்து 9 ஜோடி மாற்றுத்திறன் படைத்த மணமக்களுக்கு திருமணம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தார்கள்.

சேலம் ரோட்டரி கிளப் ஆப் சேலம் எலைட் மற்றும் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இணைந்து 9 ஜோடி மாற்றுத்திறன் படைத்த மணமக்களுக்கு திருமணம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தார்கள்.

 இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா .இராஜேந்திரன் ,சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, பாராளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் ரோட்டரி இன்டர்நேஷனல் டைரக்டர் ரொட்டேரியன் முருகானந்தம், ரொட்டேரியன் சிவசுந்தரம், மாவட்ட ஆளுநர் அரிமா லவ்.ஓ. நாகராஜன், செண்பகவள்ளி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தமிழ்நாடு உதவிக்கரம், மாற்றுத்திறனாளிகள் சங்கத்திலிருந்து சிதம்பரம், சுரேஷ், பிரபாகர், தீபக், குமார், குப்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். மணமக்களுக்கு ஸ்வர்ண மாங்கல்யம் எவர்சில்வர் பாத்திரங்கள், மளிகை பொருட்கள், கிரைண்டர், மிக்ஸி, கட்டில், மெத்தை போன்ற குடும்பத்திற்கு தேவையான சகல சீர்வரிசைகளுடன் ரோட்டரி கிளப் ஆப் சேலம் எலைட் தலைவர் ரொட்டேரியன் மகேஷ் குமார் ,செயலாளர் அருண் பிரசாத், சிறப்பு சேவை திட்ட தலைவர் ரெட்டேரியன் ரேவதி மற்றும் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க தலைவர் அரிமா அத்தி அண்ணன் ,துணைத்தலைவர் சக்திவேல், குமரவேல் ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow