திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது அவரது விருப்பம் - கு.ப.கிருஷ்ணன் பேட்டி

Feb 27, 2026 - 19:16
 12
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது அவரது விருப்பம் - கு.ப.கிருஷ்ணன் பேட்டி

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது அவரது விருப்பம் - கு.ப.கிருஷ்ணன் பேட்டி

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,c தமிழக வெற்றி கழகம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான, பாசறை கூட்டம் பஞ்சப்பூர் பகுதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தவெக தேர்தல் கண்காணிப்பாளருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார். தேர்தல் இணை கண்காணிப்பாளர் சுந்தர், திருச்சி மாவட்ட தேர்தல் பிரச்சார குழு உறுப்பினர் பிச்சைரத்தினம் கரிகாலன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மோகன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்வரன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அருள்விஜய் ,திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

கூட்டத்திற்கு பின் தேர்தல் கண்காணிப்பாளர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், :--

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது அவரது விருப்பம் இதில் நான் கருத்து சொல்ல தேவையில்லை. 

கரூர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்தது என்னுடைய சொந்த கருத்து. எங்கள் கட்சி தலைவரின் கருத்து அல்ல. அதுவும் நான் மத்திய அரசை விமர்சிக்கவில்லை. சி.பி.ஐ தான் விமர்சனம் செய்துள்ளேன். விஜையை கரூரில் விசாரிக்காமல் டெல்லியில் விசாரித்தது தவறு என்று தான் கூறியுள்ளேன். தமிழ்நாட்டில் விஜய்க்கு பாதுகாப்பு தருவதில்லை.

த.வெ.கவில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாத அளவிற்கு அதிக அளவு விருப்ப மனு வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்க விஜய்க்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பு தரும் என கூறினால் இப்போதே மக்களை சந்திக்க நாங்கள் தயார்.

தேர்தல் அறிவிப்புக்கு பின், தேர்தல் பிரச்சாரம் குறித்து நாங்கள் அறிவிப்போம். நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம். எங்களுடன் எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது தலைமையின் முடிவு.

த.வெ.கவில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான நானும் செங்கோட்டையனும் தான் இணைந்துள்ளோம். எங்களிடம் ஊழல் கிடையாது, கருப்பு பணம் கிடையாது. நியாயவாதிகளாக நாங்கள் இருக்கிறோம். எங்களை விஜய் கட்சியில் சேர்த்து கொண்டுள்ளார். திமுக, அதிமுக அமைச்சர்கள் யார் மீது வழக்கு இல்லை. 

கரூர் விவகாரத்தில் ஏன் ஒரு நபர் ஆணையம் பாதியில் விடப்பட்டது, சிறப்பு புலனாய்வு குழு ஏன் பாதியில் விடப்பட்டது. கரூரில் சி.பி.ஐ விசாரணை செய்திருந்தால் விஜய் கரூருக்கு நேரில் வந்திருப்பார்.

த.வெ.க தொண்டர்கள் வெள்ளம் போன்றவர்கள். எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. த.வெ.க என்பது சுயம்பு இன்ஜின்.

இலவச திட்டங்கள் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மேடு பள்ளத்தை சமன் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. த.வெ.க மீது உள்ள பயத்தின் காரணமாக தி.மு.க, அதிமுக இரண்டு கட்சிகளும் இலவசங்களை அறிவித்துள்ளது.

திமுக அரசு தொடங்கிய மகளிர் உரிமை தொகையை நாங்கள் தொடர வேண்டும் என அவசியமில்லை. நாங்கள் பொருளாதாரத்தில் சமன் செய்யும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வருவோம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது தான் விஜய்யின் இலட்சியம் அதை நாங்கள் செய்வோம். 234 தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர் விஜய் தான் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow