அரசநத்தம் ஊராட்சி தலைவர் வெள்ளையன் மீது நடவடிக்கை எடுக்க புகார்

May 29, 2024 - 14:33
May 29, 2024 - 18:53
 21

அரசநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளையன் நடவடிக்கை எடுக்க புகார்

சேலம் பச்சையம்மாள் கணவன் பெயர் ரமேஷ் அரசநத்தம் புது காலனி நடுத்தெருவை சேர்ந்த நான் கடந்த குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 100 நாள் வேலை கொடுக்கப்படவில்லை மற்றும் மஞ்சினி மல்லிகா முருகேசன் அவர்கள் இடம் தாலுகா ஆபிஸ் பட்டா  வாங்கித் தருவதாக கூறி  என்னிடம் பணம் வாங்கினார்கள் பட்டா தரவில்லை எப்ப தருவீர்கள் என்று கேட்டேன். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக 100 நாள் வேலை செய்ததற்கு வந்த பணத்தை எடுத்து தாருங்கள் என்று கூறினார்கள் நான் தர மறுத்து விட்டேன். அன்றைய தினத்தில் இருந்து என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு கிராமசபைகூட்டத்தில் கேள்வி கேட்டதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளையன் என்னை தகாத வார்த்தைகளை திட்டினார். என்னை அடிக்க வந்தார், உடன் அவருடைய அக்கா அங்காயி, மகள் மற்றும் அவரது உறவினர்கள் காந்தி என்பவரும் என்னை கடுமையான வார்த்தைகள் திட்டினார்கள்.  எங்கு சென்றாலும் என்னிடம் தான் வந்து ஆக வேண்டும் எப்படி பட்டா  பெறுவா பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டினார்கள். எனது உயிருக்கும் உடமைக்கும் தகுந்த பாதுகாப்பு தரும்படி உயர்திரு காவல் ஆய்வாளரிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

 இந்தப் புகார் சம்பந்தமாக 10.02.2024ம் தேதி வெள்ளையன் ஆஜராகி உள்ளார். மேற்கண்ட இந்த பிரச்சனைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆய்வாளர்களிடம்  விசாரணைக்கு கூப்பிட்டாலும் வருகிறேன் என்று கூறியுள்ளேன்.

 இந்நிலையில் செல்வம் மற்றும் 10 நபர்களுடன் வந்து உன்னை உயிருடன் விடமாட்டேன் என்று மிரட்டி சென்றுள்ளனர். எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உயர்திரு காவல் ஆய்வாளரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow