சேலத்தின் புதிய உதயம் நாம் மருத்துவமனை திறப்பு விழா
சேலத்தின் புதிய உதயம் நாம் மருத்துவமனை திறப்பு விழா
சேலம், நெத்திமேடு, அன்னதானபட்டியில் நாம் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு,மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு ஆர்.ராஜேந்திரன் மற்றும் வணக்கத்திற்குரிய மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஐ எம் ஏ மாநில தலைவர் டாக்டர் செங்கோட்டவன், முன்னாள் ஐ எம் ஏ மாநில தலைவர் டாக்டர் பிரகாசம் மற்றும் திரைப்பட நடிகர் மோட்டிவேஷன் ஸ்பீக்கர் அஜய் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாம் மருத்துவமனையின் நிறுவனர்&தலைவர் ரமேஷ் முருகேசன் திரு ரமேஷ் முருகேசன், இணை நிறுவன இயக்குனர்கள் திரு. பிரபு செங்குட்டு வேல், நடராஜன் சுப்பிரமணியம், நிறுவனர்& நிர்வாக இயக்குனர் டாக்டர். முத்துராஜன் பரமசிவம், இணை நிறுவன இயக்குனர்கள் டாக்டர் கார்த்திகேயன் செங்கோட்டையன் மற்றும் டாக்டர் ஸ்ரீதேவி செந்தில் ராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
திறப்பு விழாவில் நாம் மருத்துவமனை பற்றி சிறப்பு அம்சங்களை பற்றி கூறியதாவது : சிறந்த சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளம் நாம் மருத்துவமனை , இங்கு அனுபவம் மிக்க மருத்துவர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், மருந்தகம் மற்றும் 200 படுக்கை வசதிகள் உடன் மிகச் சிறப்பான மருத்துவ சேவையை வழங்க உள்ளோம். மேலும் நாம் மருத்துவமனையில் உள் மருத்துவ மற்றும் பொது அறுவை சிகிச்சை , நுரையீரல் மருத்துவம் மற்றும் தீவிர சுவாச சிகிச்சை பிரிவு, குழந்தைகள் மருத்துவம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு (நிலை 3), மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, எலும்பியல் விபத்து மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை, மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரகம் மருத்துவம் மற்றும் டயாலிசிஸ் பிரிவு , மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை இரைப்பை உடல் மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், எல் இ டி ஆர் சூட், இருதயவியல் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரபிகள் மருத்துவம் நீரிழிவு தோல் மருத்துவம் மனநல மருத்துவம், பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு சிகிச்சை பிளாஸ்டிக் மட்டும் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை சிறுநீரகவியல் போன்ற எண்ணற்ற பிரிவுகள் மக்கள் நலனுக்காக நாம் மருத்துவமனை மருத்துவ சேவைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன என தெரிவித்தார்.
திறப்பு விழாவிற்கான ஏற்பாட்டினை நாம் மருத்துவமனையின் அலுவலக அதிகாரிகள் செய்திருந்தனர்.
What's Your Reaction?



