சேலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சேலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைத்து தர வலியுறுத்தி, மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் அய்யனார் தலைமையில் சுற்றியுள்ள கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் மல்லூர் ரயில் நிலையத்தை முற்றுகைட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
அவர்களிடம்கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகுமார் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோரிக்கை பாதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
. இந்த போராட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மல்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது வேங்காம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைக்கவிட்டால், இனி ரயில்களை இப்பகுதி வழியாக ரயில் பாதையில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?



