தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா 

Jul 28, 2025 - 08:04
 14
தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா 

தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா 


சேலத்தில் சூசன் அம்மாள் மஹாலில் தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா நடைபெற்றது. இதில்  பணி நிறைவு பெற்ற ஆசிரியர் பெருந்தகைகளுக்கு பாராட்டு விழா, நல்லாசிரியர் கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, சேலம் ஊரக வட்டார கிளையில் புதிய பொறுப்பாளர்கள் பதவிக்கு விழா ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது, 
இவ்விழாவில் ஐபேட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
இந்நிகழ்ச்சியை அ.ராஜ்குமார் தலைமை தாங்கினார், மா.சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினர், லோ.மணிகண்டன் இயக்க உறுதிமொழியை வாசித்து ஏற்றுகொண்டனர். பணி நிறைவு பெற்ற இயக்க செம்மல்களுக்கு நல்லாசிரியர்களுக்கு புதிய பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் இறுதியாக கா. சுகந்தி நன்றியுரை ஆற்றினார். 
மேலும் மாநில பொறுப்பாளர்களும் மேனாள் பொறுப்பாளர்களும் அலுவலர்களும் மாவட்ட வட்டார பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow