சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
திருச்சியில் நடைபெற்ற மதசார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நடைபெற்றது.
இந்த பொதுக் கூட்டத்திற்கு தலைமை காஜா மைதீன் மொழியரசு மெய்யழகன் கருப்பையா தெய்வானை வீணா தமிழன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர் தலைமை வகித்தனர்
முன்னிலை ஜே மு இமயவர்மன் மண்டல செயலாளர், கு ஆர் முகம் மண்டல துணைச் செயலாளர் கே நாராயணன் மண்டல துணைச் செயலாளர் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு தீர்மான விளக்க உரையை வே கனியமுதன் மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா நாவரசன் சேலம் கே ஜெயச்சந்திரன் மாநகர மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் தலைமை நிலைய பொறுப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு ஆளுமை மிக்க கட்சியாக மாறி உள்ளது. எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களின் பேச்சைக் கேட்பதற்கு இரவு முழுவதும் காத்திருக்கும் மக்கள் உள்ளனர். மக்கள் விரும்பும் தலைவராகவும் மக்களைப் பற்றி நேசித்து மக்களின் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தலைவராகவும் உருவகித்து உள்ளார் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் மேலும் பாஜகவின் பாசிசம் இங்கு எடுபடாது தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திண்ணை பிரச்சாரம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளதாகவும் தெரிவித்தனர்.
What's Your Reaction?



