சேலம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 10 வினாடிகளில் பார்வையைச் சரிசெய்யும் 'ஸ்மைல் புரோ' சிகிச்சை அறிமுகம்
சேலம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 10 வினாடிகளில் பார்வையைச் சரிசெய்யும் 'ஸ்மைல் புரோ' சிகிச்சை அறிமுகம்
ஸ்மைல் புரோ என்பது, உலகின் முதல் ரோபோட்டிக் முறையிலான, மடிப்பில்லாத, குறைந்த ஊடுருவல் கொண்ட லேசர் திருத்த சிகிச்சை செயல்முறை உத்தியாகும்; மென்மையானதாகவும் மற்றும் வலியற்ற சிகிச்சையாகவும் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 30 -ம் தேதி வரை ஸ்மைல் புரோ பார்வைத்திறன் மதிப்பீடு மற்றும் ஸ்மைல் புரோ அறுவைசிகிச்சைக்கான கட்டணம் மீது 50% தள்ளுபடியை இம்மருத்துவமனை வழங்குகிறது.
சேலம்: 13 நவம்பர் 2025: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சேலம் ஸ்மைல் புரோ (சிறிய கீறல் வழியாக கருவிழியை சரிசெய்தல்) என்ற உலகின் முதல் மற்றும் ஒரே ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை இம்மாநகரில் தொடங்கியிருக்கிறது. 10 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் கிட்டப்பார்வை மற்றும் சிதறல் பார்வையை சரிசெய்வதற்கு ஒரு குறைவான ஊடுருவல் உள்ள மற்றும் அதிக துல்லியமான சிகிச்சை முறை இது. இந்த சிகிச்சைக்குப் பிறகு கண் கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை.
சேலம் மாநகரின் காவல்துறை ஆணையர் திரு. அனில் குமார் கிரி. ஐபிஎஸ், இந்த நவீன சிகிச்சை திட்டத்தை இன்று சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தொடங்கி வைத்தார். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். E. கற்பகவள்ளி மற்றும் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். ரம்யா சம்பத் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
இச்சிகிச்சையில், 'ஃபெம்டோசெகண்டு லேசர்' (Femtosecond Laser) கருவி, உங்கள் கருவிழிப் படலத்திற்குள் 'லென்ட்டிகியூல்' (Lenticule) எனப்படும் மிகச் சிறிய, லென்ஸ் வடிவ திசுவை உருவாக்குகிறது. பின்னர், அந்தத் திசு ஒரு சிறிய துளை வழியாக அகற்றப்படுகிறது. அந்தத் திசுவை அகற்றுவதன் மூலம், கருவிழிப் படலம் மறுவடிவமைக்கப்படுகிறது. இது, ஒளிக்கதிர்கள் உங்கள் கண்ணில் சரியாகக் குவியச் செய்து, பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்கிறது. மிகவும் குறைவான அசௌகரியமே இதில் இருக்கும்; சிகிச்சைக்குப் பிறகு இயல்புநிலைக்கு விரைவாக மீளலாம். பெரும்பாலும், இதற்குப் பிறகு கண் கண்ணாடிகள் மற்றும் கான்டாக்ட் லென்ஸ்களை அணிவதற்கான தேவையை இது முற்றிலுமாக நீக்கிவிடுகிறது அல்லது பெரிதும் குறைத்து விடுகிறது. அசாதாரணமான துல்லியத்துடனும், பாதுகாப்புடனும் இந்த நுட்பமான அறுவைசிகிச்சை செயல்முறையை கண் மருத்துவர்கள் செய்வதற்கு விசுமேக்ஸ் 800 என்ற மிக நவீன ஃபெம்டோசெகண்டு லேசர் சாதனம் உதவுகிறது.
இந்நிகழ்வின்போது காவல்துறை ஆணையர் திரு. அனில் குமார் கிரி பேசுகையில், “டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறையான SMILE லாசிக் செயல்திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய மிக நவீன சிகிச்சையின் பலன் வெகுசிலருக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. இந்த புரட்சிகரமான சிகிச்சை செயல்முறைகள் அனைத்து இடங்களிலும் கிடைக்குமாறு செய்யப்படுவது அவசியம்; இதன்மூலம் பார்வை குறைபாடுகளை சரிசெய்யும் சிகிச்சையானது, எளிமையானதாக, அதிக பயனளிப்பதாக மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பலன் பெறுவதாக இருக்கும். இந்த இலக்கை நோக்கிய முக்கியமான இந்த முன்னேற்ற நடவடிக்கையை எடுத்திருப்பதற்காக சேலத்திலுள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையை மனமார பாராட்டுகிறேன். நல்ல பார்வைத்திறன் என்பது, மருத்துவ ரீதியில் ஒரு சாதக அம்சம் மட்டுமல்ல; நமது நாட்டின் வளர்ச்சிக்கு நேரடி பங்களிப்பை வழங்கக்கூடிய கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி திறனை ஏதுவாக்கும் முக்கிய அம்சமாக திகழ்கிறது.” என்று கூறினார்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். E. கற்பகவல்லி, SMILE புரோ சிகிச்சை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரிக்கையில், “கண் சிகிச்சை தொழில்நுட்பத்தில் மிக சமீபத்திய கண்டுபிடிப்பை சேலம் மாநகருக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். SMILE புரோ என்பது, மிகச்சிறப்பான துல்லியத்துடன் கிட்டப்பார்வை மற்றும் சிதறல்பார்வை குறைபாடுகளை சரிசெய்கின்ற ஒரு சிகிச்சையாகும். புரட்சிகரமான இந்த நுட்பம், குறைவான ஊடுருவல் உள்ள ஒரு மருத்துவ செயல்முறையாகும். பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் லேசர் அறுவைசிகிச்சைகள் போல் அல்லாமல் இந்த நவீன உத்தியில் ஒரு மிகச்சிறிய கீறல் மட்டுமே தேவைப்படும்; கருவிழியின் நிலைத்தன்மையை பாதுகாப்பதுடன், அறுவைசிகிச்சைக்குப் பின்பு வரக்கூடிய இது குறைக்கிறது. மிக வேகமாக குணமடைவது, மிக குறைவான கண் உலர்வுத்தன்மை மற்றும் மிகப்பிரமாதமான பார்வைத்திறன் பலன்கள் ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் சிறப்பான ஆதாயங்களைப் பெறுகின்றனர். பார்வைக்குறைபாட்டை சரிசெய்யும் செயல்முறையை இது அதிகப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. இதற்கு முன்பு இருந்ததை விட அதிக சௌகரியமானதாகவும் இதன் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.” என்று கூறினார்.
விசுமேக்ஸ் 800 ஃபெம்டோசெகண்டு லேசர் சாதனம், இந்த செயல்முறையின் மைய அம்சமாக இருக்கிறது என்று குறிப்பிட்ட டாக்டர். கற்பகவல்லி, “நிகரற்ற துல்லியத்துடனும், பாதுகாப்புடனும் SMILE புரோ அறுவைசிகிச்சையை மேற்கொள்ள எமது மருத்துவ நிபுணர்களுக்கு இது உதவுகிறது. லென்ட்டிகியூல் என்ற திசுவையும் மற்றும் மிகச்சிறிய கீறலையும் நம்ப முடியாத துல்லியத்துடன் உருவாக்குவதற்கு இந்த லேசர் சாதனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இச்சிகிச்சையை மேற்கொள்ளும் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரியான நிலையான சிகிச்சை விளைவுகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விரைவான, நம்பகமான மற்றும் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்தும் பார்வை குறைபாட்டை சரிசெய்யும் சிகிச்சையை எங்களால் வழங்க முடியும். கண் கண்ணாடிகள் அணிவதற்கான தேவையை முற்றிலுமாக நீக்கக்கூடிய இந்த சிகிச்சை முறை ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையும் சிறப்பாக மேம்படுத்துகிறது.” என்று மேலும் கூறினார்.
நோயாளிகளுக்கு இந்த புதிய மருத்துவ செயல்முறையின் பொருந்துநிலை குறித்து டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். ரம்யா கூறியதாவது:
SMILE புரோ என்பது, ரோபோ உதவியுடன் செய்யப்படும், மிக மென்மையான மற்றும் வலியற்ற லேசர் பார்வைத் திருத்த சிகிச்சையாகும். இது மிகக் குறைவான ஊடுருவல் கொண்டது.
அதிக அளவு கிட்டப்பார்வை உள்ளவர்கள் உட்படப் பலருக்கும் இது பொருந்தும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறைந்தது ஒரு வருடமாக நிலையான கண்ணாடி பவர் உள்ளவர்கள். ராணுவம், காவல்துறை, விமானப்படை மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற குறிப்பிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மெல்லிய கருவிழிப் படலம் உள்ளவர்கள் அல்லது கான்டாக்ட் லென்ஸ் அணிய முடியாதவர்களும் இச்சிகிச்சையைப் பெறலாம். கண்களில் நடுக்கம் உள்ளவர்களுக்கும், கருவிழியில் தழும்பு ஏற்பட்டவர்களுக்கும் கூட ஒளிவிலகல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்வதில் எங்களுக்கு நல்ல அனுபவம் உள்ளது. ஒவ்வொரு நோயாளிக்கும் முழுமையான பரிசோதனை செய்து, அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் பார்வைக் குறைபாடுகளை ஆராய்ந்த பின்னரே, ' SMILE புரோ' அவர்களுக்குச் சரியான தேர்வா என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.”
What's Your Reaction?



