மத்திய மாநில அரசாங்கம் இதில் தலையிட்டு காகித ஆலைகளை எந்த வித மறைமுக விலை ஏற்றம் செய்யமால் Nil Rate-ல் எங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்
மத்திய மாநில அரசாங்கம் இதில் தலையிட்டு காகித ஆலைகளை எந்த வித மறைமுக விலை ஏற்றம் செய்யமால் Nil Rate-ல் எங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்
சமீபத்தில் நமது நாட்டில் GSTவரி மறு சீரமைப்பு வந்துள்ளது. இதன் முக்கிய திருத்தம் மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகம் (Notebook) 0% -ல் (Nil Rate) அமையும் என அறிவிப்பு வந்துள்ளது. அதே சமயம் நோட்டுப் புத்தகங்களுக்கு தேவையான மூலபொருள் ஆன Paper மற்றும் Board-யை அரசாங்கம் Nil Rate பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வந்துள்ளது.
நோட்டுப்புத்தகம் தயாரிப்பாளர்கள் ஆகிய நாங்கள் மாணவர்களுக்கு GST-ல் அறிவித்தபடி Nil Rate-ல் விற்பனை செய்ய தயராக உள்ளோம்.
அனால் அதே சமயத்தில் GST வரி Paper மற்றும் Board 18% ஆக உயர்ந்துள்ளது. காகித ஆலைகள் எங்களுக்கு 0% விற்பனை செய்ய முன் வரவில்லை. இது சம்மந்தமாக மத்திய, மாநில மந்திரிகளை அனுகி எங்கள் நிலைமைகளை தெரிவித்துவிட்டோம் மேலும் வெளிநாட்டிலிருந்து Paper மற்றும் Notebook Nil Rate-ல் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது இதை பயன்படுத்தி பெரிய Corporate நிறுவனங்கள் பயனடைய வாய்ப்புள்ளது இந்த பொருள்கள் இந்திய சந்தைக்குள் வந்தால் சிறு குறு நோட்டுப்புத்தகம் தயாரிப்பாளர்கள் அழிந்துவிடும் சூழல் ஏற்படும்.
இப்போது உங்கள் வாயிலாக மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எங்களுடைய நிலைபாட்டை தெரிவிக்கிறோம். மத்திய மாநில அரசாங்கம் இதில் தலையிட்டு காகித ஆலைகளை எந்த வித மறைமுக விலை ஏற்றம் செய்யமால் Nil Rate-ல் எங்களுக்கு விற்பனை செய்ய வலியுறுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் சரவணன் - செயற்குழு உறுப்பினர்கள். பிரவீன், பாலாஜி, விஸ்வநாதன், செந்தில்குமார், முரளி
சதீஷ், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?



