சேலம். முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் வழக்குரைஞர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம். முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் வழக்குரைஞர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நீதிபதியின் மீது காலணி வீச முயன்ற வழக்குரைஞர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும், நீதி துறையையும் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் சசிகுமார், வீரமணி, இளையராஜா, பூமொழி, பிரேம்குமார், தமயந்தி, சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?



