கொலை மிரட்டல் விடுக்கும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

Jan 22, 2025 - 08:46
 19
கொலை மிரட்டல் விடுக்கும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கொலை மிரட்டல் விடுக்கும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு 

சேலம் மாவட்டம் சூரமங்கலம் ரயில்வே காலனி பகுதியை சார்ந்த எல்.அம்பிகா என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். 

புகார் மனுவில் தான் தென்னக ரயில்வே சேலம் கோட்டத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தன்னை சன்சைன் 
பிராப்பர்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று தனது தொலைபேசிக்கு தகவல் வந்ததன் அடிப்படையில்,சேலம் புதுரோடு ரயில் நகரில் பிளாட் நம்பர் ஒன்று உடனடி கிரையத்திற்கு விற்பனைக்கு உள்ளது என்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஊழியர் ஹேமாவதி என்ற நபர் அழைத்ததன் பெயரில் அதனை நம்பி அந்த இடத்தை பார்த்து அதனுடைய மொத்த தொகை 35 லட்சத்து 27 ஆயிரம் என்றும்,உடனடியாக பணம் கட்டினால் உடனடியாக கிரையம் செய்து தருவதாக கூறி ஒரு பத்திரத்தின் நகலை காண்பித்தார்கள். அவர்கள் காண்பித்த நகலினை நம்பி தங்களுக்கு சேமிப்பு தொகையையும் தான் கையில் வைத்திருந்த நகைகளை அடமானம் வைத்து நான்கு தவணைகளாக 27 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்ட பிறகு மல்லிகா என்ற பெயரில் ஒரு பத்திரத்தை கொடுத்திருக்கின்றனர். மேலும் மீதித் தொகை ரூபாய் 8,27,000 பணமும் ஆதார் கார்டும் கேட்டதன் அடிப்படையில் அதனை ஏற்பாடு செய்து கொண்டு கிரையம் செய்ய அழைத்த பொழுது அவர்கள் கிரயம் செய்து தர காலதாமதம் செய்தும் வர மறுப்பும் செய்கின்றனர். தாங்கள் பலமுறை கேட்டால் பணம் தரமாட்டோம் கிரையம் செய்து தரமாட்டோம் என்று கூறுவதுடன், அலுவலகத்துக்கு எங்களை வரவழைத்து மிரட்டியும் அம்மாபாளையம் சேர்ந்த டேவிட், குமார் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர்கள் சேர்ந்து கொலை செய்து விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுகின்றனர்.இது போல் பல பேரிடம் மோசடி செய்து வரும் சன்சைன் கிராபிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சரண்யா மற்றும் பணியாளர் கவிதா ஹேமாவதி கல்பனா,கோமதி ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியும் தாங்கள் கட்டிய பணத்தை மீட்டு பரிந்துரை செய்ய வேண்டியும் தங்களது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow