சாயப்பட்டறைகள் தண்ணீர் பூமிக்குள் வராது பொதுமக்களை பாதிக்காது

Nov 10, 2025 - 19:49
 13
சாயப்பட்டறைகள் தண்ணீர் பூமிக்குள் வராது பொதுமக்களை பாதிக்காது

சாயப்பட்டறைகள் தண்ணீர் பூமிக்குள் வராது பொதுமக்களை பாதிக்காது

சேலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியில்சேலம்சாயப்பட்டறைகளின் தலைவர் தலைவர் அழகரசன் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலை நம்பி உள்ளனர் ஆங்காங்கே உள்ள சாயப்பட்டறைகளை முறைப்படுத்தும் வகையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் ஜவுளி பூங்காபணிகள்தொடங்கப்பட்டுள்ளது இந்த ஜவுளி பூங்கா மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேர்முகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் இந்த ஜவுளி பூங்காவில் 21 சாயப்பட்டறைகள் அங்கு அமைய உள்ளது சாயப்பட்டறைகளில் இருந்து வரும் தண்ணீர் பூமிக்குள் இறங்காத வகையில் நவீன சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது மேலும்அந்ததண்ணீர்வெளியே வராத வகையில் மறு சுழற்சி செய்து அந்த தண்ணீரை பயன்படுத்தும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது இதனால் எந்த வகையிலும் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாது அந்த பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதற்கான தண்ணீர் எடுக்கப் போவதில்லை திரு மணி முத்தாறு கழிவு நீரை எடுத்து பயன்படுத்த உள்ளோம் திருமணிமுத்தாரில் தற்போது கலக்கும் சாயக் கழிவு நீர் கூட வரும் காலங்களில் கலக்காது ஜாகிர் அம்மாபாளையம் பகுதி மக்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம் எந்த காரணம் கொண்டும் தண்ணீர் பூமிக்கு அடியில் இறங்காது மறுசுழற்சி செய்து அந்த தண்ணீரை நாங்கள் பயன்படுத்துவதால் அந்தப் பகுதியில்குடிநீருக்கும்விவசாயத்திற்கும் எந்த பாதிப்பும் வராது இதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம் இதனை அந்தப் பகுதி மக்களை சந்தித்தும் விளக்கம் அளிப்போம் என்று நிருபர்களிடம் அவர் கூறினார் இந்த செய்தியாளர் சந்திப்பில் சாயப்பட்டறை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow