சிஐடியு சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
சிஐடியு சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் தொடங்கியதை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி பால் மார்க்கெட் ரயில்வே கூட்செட் வளாகத்தில் நடைபெற்றது.
சிஐடியு சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நடைபெறுகிறது. இதனிடையே 50 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை இல்லா தமிழகம் என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பால் மார்க்கெட் பகுதியில் உள்ள ரயில்வே கூட்செட் வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர். வெங்கடபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரத்தான் போட்டியை செவ்வாய்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாரத்தான் போட்டி ரயில்வே கூட்செட் வளாகத்தில் இருந்து பள்ளப்பட்டி வழியாக 3 ரோடு சென்று அங்கிருந்து மீண்டும் அதே வழியாக ரயில்வே கூட் செட் வந்து அடைந்தது.
ஆண்கள் பெண்கள் என தனித்தனியே போட்டிகள் துவக்கப்பட்டு மாரத்தான் போட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. போட்டியில் முதலாவதாக நபில், இரண்டாவது இடத்தை எம். ரஞ்சித் குமார், மூன்றாவது இடத்தை எம். தங்கதுரை, நான்காவது இடத்தை கே. லட்சுமணன், ஆகியோரும் பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தை கே. ராஜேஸ்வரி, இரண்டாவது இடத்தை எம். கௌரி, மூன்றாவது இடத்தை எஸ். வைத்தீஸ்வரி, நான்காவது இடத்தை ஐஸ்வர்யா ஆகியோரும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு, கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரயில்வே பார்வர்டிங் ஏஜென்சீஸ் விசுவநாதன், கோபி, சேகர், செல்வம்,ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சிஐடியு சாலை போக்குவரத்து மாநிலத் துணைத் தலைவர் எஸ். கே. தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன் மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ மாவட்டத் துணைத் தலைவர் பி. பன்னீர்செல்வம், உள்ளிட்டு சிஐடியு ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
What's Your Reaction?



