வள்ளி எழும்பியல் மற்றும் விளையாட்டு துறை மருத்துவமனை சார்பாக இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Mar 12, 2023 - 21:29
 23

சேலம் மெய்யனூர் ரோடு பகுதியில் அமைந்துள்ள வள்ளி எழும்பியல் மற்றும் விளையாட்டு துறை மருத்துவமனை சார்பாக இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் வள்ளி மருத்துவமனை நிறுவனர், எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் நடன சபாபதி  தலைமையில் நடைபெற்றது. மற்றும் அவசர சிகிச்சை நிபுணர் மருத்துவர் வாசுகி, பொது மருத்துவர் விஜயலட்சுமி, சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் அம்பிகா,  மருத்துவமனை அலுவலக ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். 

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் எலும்பு அடர்த்தி மருத்துவ பரிசோதனை, இ. சி. ஜி.  எக்ஸ்ரே, இருதய பரிசோதனை நடைபெற்றது. இதில் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில்
300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow