வாசன் கண் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாசன் கண் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா
ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாசன் கண் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக V. கோகிலா, வட்டார போக்குவரத்து அலுவலர், சேலம் மேற்கு மாற்று K. கிட்டு, காவல் ஆய்வாளர் போக்குவரத்து பிரிவு சேலம் மாநகரம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, டாக்ஸி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனையில் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்வில் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர்.C. செல்வகுமாரி,டாக்டர்.P. சந்தனா, டாக்டர்.M. லாவண்யா, டாக்டர்.P. சுவர்ணலதா ஆகியோர் கலந்து கொண்டு ஓட்டுநர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை குறிப்பு: வழங்கினர்.
சாலை பாதுகாப்பு வார விழாவை சிறப்பிக்கும் விதமாக, ஜனவரி 11 முதல் பிப்ரவரி 11 வரை வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?



