விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக கி.காயத்ரி விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு

Jan 4, 2026 - 16:03
 12
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக  கி.காயத்ரி  விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக
கி.காயத்ரி விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை பகுதிக்கு வருகை தந்த சேலம் தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் கி.காயத்ரிக்கு அப்பகுதி பொதுமக்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கையும் கொண்டாடினர். மேலும் ஆளுயர மாலையை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒரு அடிப்படை தேவை என்றால் கூட காயத்ரி செய்து தந்ததாகவும் பொது மக்களின் தேவை அறிந்து தொடர்ந்து பொது சேவையையும் பலவிதமான சமூகப் பணிகளையும் செய்து வந்த செயலுக்கு தற்போது அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேலம் தெற்கு மாவட்ட பகுதிக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் இனிப்பு மற்றும் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வரவேற்பு நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow