50-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதை நிறுத்த வேண்டும் - பொதுமக்கள் மனு

Nov 7, 2025 - 09:21
 14
50-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதை நிறுத்த வேண்டும் -  பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம் சேலம் மேற்கு வட்டம் - ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில் சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிகிறோம்

இந்தப் பகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகளும் உள்ளன இத்திட்டம் சுற்றியுள்ள கிராமங்களில் முறையான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படாமல், மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் கருத்தில் கொள்ளப்படாமல் முன்னெடுக்கப்படுகிறது. கண்துடைப்பாக ஜாகிர் அம்மாபாளையம் கிராமத்தில் மட்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மக்கள் நலனை புறக்கணிக்கும் செயலாகும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், பாதிக்கப்படும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும் ஆனால் அது முறையாக நடைபெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு எங்கள் பகுதியில் இருந்தே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது மேலும் புளியம்பட்டி குள்ளக்கவுண்டனூர், பல்பாக்கி. ஜங்ஷன் வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, மூங்கில்பாடி, செங்கரடு காமிநாய்க்கன்பட்டி,

ஏற்கனவே 2013 ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட A TEX என்ற தனியார்-சாயப்பட்டறை கழிவுகளால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளால் அப்போதே மக்கள் போராட்டம் செய்து சாயப்பட்டறையை அப்புறப்படுத்தினர். ஒரு சாயப்பட்டறை அமைக்கப்பட்ட போதே பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளன பகுதியில் தற்போது லக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கப்படுவது பெரிதும் கண்டனத்திற்குறியது இது முழுக்க முழுக்க மக்கள் நலனை எள்ளளவும் கருத்தில்கொள்ளாமல் கொண்டுவரப்படும் மக்கள் விரோத திட்டமாகும்.

எனவே மக்கள் குடியிருப்புகள் நிறைந்த மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், இல்ல நீர் மற்றும் காற்று மாசுபடாதவாறு POLLUTION INDEX 40-க்கு குறைவாக இருக்கும் WHITE அல்லது GREEN CATEGORY PROJECTS பட்டியலில் வரும் ஆக்கபூர்வமான மாற்று திட்டங்களை கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால், சாயப்பட்டறை போன்ற RED CATEGORY நாசகார திட்டத்தை உடனடியாக கைவிட்டு, வேறு மாற்று திட்டத்தை கொண்டு வர வேண்டும் எங்கள் சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுநலனுக்காக அனைத்து கிராமங்களின் மக்கள் சார்பாக மன்றாடி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மிகுந்த நன்றியுடன், சுசீந்திரகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் & விவசாயிகள், வெள்ளக்கல்பட்டி, மாமாங்கம், ரெட்டியூர், ஜாகிர் ரெட்டிப்பட்டி, ஜாகிர் அம்மாபாளையம், கருப்பூர், மல்லமூப்பம்பட்டி, காமிநாய்க்கன்பட்டி, மாங்குப்பை மற்றும் சாமிநாய்க்கன்பட்டி சேலம் மாவட்டம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow