சேலம் அயோத்தியாபட்டினம் மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலணியில் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் முதியோர் இல்லம் திறப்பு விழா 

Feb 21, 2026 - 19:03
Feb 21, 2026 - 19:08
 43
சேலம் அயோத்தியாபட்டினம் மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலணியில் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் முதியோர் இல்லம் திறப்பு விழா 

சேலம் அயோத்தியாபட்டினம் மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலணியில் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் முதியோர் இல்லம் திறப்பு விழா 

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் முதியோர் இல்லம் திறப்பு விழா பூஜ்ய ஸ்ரீ சுவாமி கௌதமானந்தா அவர்களின் நல்லாசியுடன் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக சுவாமி யதாத்மானந்தா, சுவாமி அபாயானந்தா சரஸ்வதி, கே.குமாரசுவாமி கலந்து காண்டனர். ரவிக்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். செந்தில்குமார் விழாவை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆறுமுகம், அசோகன், கார்த்திக், ரவி, சுப்பிரமணியன் ஆகிய நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர். இறுதியில் எஸ்.ரவி, கே. மனோகரன் நன்றியுரை கூறினர். 
இந்த ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் முதியோர் இல்லத்தில் 20 கட்டில் மற்றும் படுக்கை தலையணை அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்கள் நடப்பதற்கு நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கும் முதியோர்களுக்கு மூன்று வேலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆரோக்கியமாக இருப்பதற்கு தகுந்த மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. 
இந்நிகழ்ச்சியினை மோகன் குமரன் தொகுத்து வழங்கினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow