சேலத்தில் கிறிஸ்டல் பில்டிங் எக்ஸ்போ 2025 கண்காட்சி
சேலத்தில் கிறிஸ்டல் பில்டிங் எக்ஸ்போ 2025 கண்காட்சி
கிரிஸ்டல் பில்டிங் எக்ஸ்போ 2025 சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. விழாவின் துவக்கமாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சர்க்கரை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தூக்கி வைத்தார். கலந்து கொண்டார்.சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் சேலம் கட்டிட மேஸ்திரி அசோசியேஷன் சார்பில் கௌரவத்தலைவர் ஆர்.கே.துரைசாமி, பர்ன் அண்ட் கோ தலைவர் எம்.கே.எம். மந்திரி, செயலாளர் பி.செல்வம், பொருளாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் 60 மேற்பட்ட நிறுவனங்களும் மற்றும் 70 மே மேற்பட்ட ஸ்டால்களும் பங்கு பெற்றுள்ளன. இக்கண்காட்சியானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கண்காட்சிக்கான ஏற்பாட்டினை கிரிஸ்டல் நிறுவனத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
What's Your Reaction?



