சேலம் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த தடுத்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள்

Jan 9, 2026 - 13:27
 19
சேலம் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த தடுத்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள்

சேலம் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த தடுத்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள்

பாதுகாப்பு வழங்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள் .... சேலம் கொங்கணாபுரம் அருகே ரங்கம்பாளையம் பகுதியில் போயர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோயில் உள்ளதுஇந்தக் கோயிலில் ஐந்து வகையறாவை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே முருகன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட விடாமலும் பொங்கல் வைத்து கொண்டாடவும் தடை விதித்து மிரட்டி வருவதாகவும் நான்கு வகையறா கோயில் அருகில் செல்லவும் விடாமல் தடுத்து வருகின்றனர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow