சேலத்தில் மழலை குழந்தைகளின் இசை நிகழ்ச்சி
சேலத்தில் மழலை குழந்தைகளின் இசை நிகழ்ச்சி
தொடர்ந்து நான்கு மணி நேரம் இசை நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேலத்தில் தனியார் TN30 ஊடக நிறுவனம் மூலம் 40 குழந்தைகள் இடைவிடாது நான்கு மணி நேரம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் வாய்ப்பாட்டு வயலின் கீபோர்ட் கிட்டார் உள்ளிட்ட பல்வேறு இசை வாத்தியங்களை பயின்ற மாணவர்கள் தங்களது இசை திறமையை வெளிப்படுத்தினர்.
சேலம் மாவட்டம் சித்தனுர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் டிஎன் 30 மீடியா மற்றும் Salar புரொடக்சன் நிறுவனம் இணைந்து நடத்திய இசை திருவிழா 2026 இல் பங்கேற்று தொடர்ந்து நான்கு மணி நேரம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் இசையை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களுக்கான ஒரு பிரமாண்டமான மேடையை வருவதன் மூலம் அவர்களை உற்சாகப்படுத்தவும் மேலும் தங்களது கலையை வளர்த்துக் கொள்ள உதவிடும் வகையில் இந்த இசை மேடையை வழங்கியதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர்
What's Your Reaction?



