சேலம் குலாலர் இளைஞர் சங்கமும், பெங்களூர் நாராயணா ஹாஸ்பிடல் இணைந்து, பொதுமக்களுக்கான இலவச இருதயம் மற்றும் எலும்பு மூட்டு மருத்துவ பரிசோதனை முகாம்

Aug 31, 2025 - 16:21
 15

சேலம் குலாலர் இளைஞர் சங்கமும், பெங்களூர் நாராயணா ஹாஸ்பிடல் இணைந்து, பொதுமக்களுக்கான இலவச இருதயம் மற்றும் எலும்பு மூட்டு மருத்துவ பரிசோதனை முகாம், கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள குலாலர் ஸ்ரீ நடராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் பழனிசாமி, உதவி தலைவர்கள்  PKC K.பாபு கந்தசாமி, துணைச் செயலாளர் கார்த்திகேயன், முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமை, தலைவர் சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், இருதய துடிப்பு, நெஞ்சு இருக்கம், தோள்பட்டையில் இருந்து வெளிப்படும் வலி, மயக்கம், அதிக அளவு வியர்வை வெளியேற்றம் மற்றும் தொடர்ச்சியான முழங்கால் வலி, முழங்கால் மூட்டு வீக்கம், நாள்பட்ட முழங்கால் உறுதியற்ற தன்மை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, இலவசமாக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow