10 .5% இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்த வேண்டும்

Aug 31, 2025 - 16:22
 12
10 .5% இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்த வேண்டும்

10 .5% இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்த வேண்டும்

சேலம் 31 8 2025 வன்னியர் கூட்டமைப்பின் செயல் வீரர்கள் கூட்டம் சேலம் வன்னியர் குல சத்திரிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வன்னிய சமுதாய மக்களின் வாழ்க்கை மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னோர்கள் விட்டுச் சென்ற பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை, ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நிர்வாகம் செய்ய, தமிழ்நாடு அரசு வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்தில் மற்ற சமூகத்தில் நலவாரியம் இருப்பதை போன்று வன்னியர் சமூகத்திற்கு என தனி நல வாரியம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைத்திட வேண்டும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அர்த்தநாரீசவர்மாவின் பொது வாழ்க்கையை கருத்தில் கொண்டு, சேலத்தில் அவரது நினைவை போற்றும் வகையில் மணிமண்டபத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்க வேண்டும், காவிரி நதி நீருக்காக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தனது பதவியை ராஜினாமா செய்த வாழப்பாடி ராமமூர்த்தி அரசியல் மற்றும் பொது வாழ்க்கையை பாராட்டும் விதமாக வாழப்பாடியில் அவரது நினைவு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும், வாழப்பாடி பகுதியில் உள்ள கரிய கோயில் மற்றும் ஆனைமடு அணைகளை சுற்றுலாத்தலமாக தமிழக அரசு மேம்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow