தமிழகத்தில் கட்டிட பொறியாளர்கள் கவுன்சில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பொறியாளர்கள் கோரிக்கை

Oct 24, 2025 - 07:43
 16
தமிழகத்தில் கட்டிட பொறியாளர்கள் கவுன்சில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பொறியாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கட்டிட பொறியாளர்கள் கவுன்சில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பொறியாளர்கள் கோரிக்கை

பல அமைச்சர்களை சந்தித்து பல கோரிக்கையும் மனுக்களை வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என வேதனை. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றி பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும். தமிழக முழுவதும் உள்ள கட்டுமான பொறியாளர்கள் சங்கங்கள்சார்பில் அரசுக்கு தங்களின் கோரிக்கைகளை தெரியப்படுத்தும் விதமாக தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம்கருப்பூர் பகுதியில் சேலம் வெஸ்ட் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து மாநில தலைவர் சபரி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 97 கட்டிட பொறியாளர் சங்கங்களை உள்ளடக்கியது 97 சங்கங்களிலும் சேர்த்து மொத்தமாக 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் பட்டம் பெற்று பொறியாளர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்கள் 

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையின் தமிழகத்தில் கட்டிட பொறியாளர்கள் கவுன்சில் அமைத்து இந்திய அரங்கில் தமிழகத்திற்கு உள்ள தனித்தன்மையை பெருமை சேர்த்திடும் வகையில் நிறைவேற்றி தருவோம் என்று கூறினர் தற்பொழுது 4 ஆண்டு நிறைவு அடைந்து ஆட்சி முடியும் தருவாயிலும் கூட இன்னும் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றவில்லை உடனடியாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர்

பேட்டி : சபரி ராஜன்,  தலைவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow